கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகும் ஐரோப்பிய நாடு

25 வைகாசி 2025 ஞாயிறு 15:53 | பார்வைகள் : 171
அடுத்த ஆண்டு முதல் மீண்டும் கட்டாய இராணுவ சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து ஜேர்மனி முடிவெடுக்க உள்ளது.
ஜேர்மனியின் ஆயுதப் படைகளுக்கு போதுமான தன்னார்வலர்களை ஈர்க்க முடியவில்லை என்றால் கட்டாய இராணுவ சேவையைத் தவிர வேறு வழியில்லை என பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் ஜேர்மனி, 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஆனால் போதுமான ஆட்களை ஈர்க்கத் தவறிவிடும் என்று தெரிகிறது.
நேட்டோ பணிகளை நிறைவேற்ற வரும் ஆண்டுகளில் கூடுதலாக 100,000 வீரர்கள் தேவைப்படுவதாக அதன் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
தன்னார்வ வீரர்களை விட அதிக பேர்கள் இராணுவத்தில் இணைக்க முடிந்தால் அதை கட்டாயமாக்க முடிவு செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றும் முன்னெடுக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.