"நீங்கள் இறப்பதற்கு முன்னர்..." பீதியைக்கிளப்பும் புதிய பிரச்சனை!
9 ஆவணி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19558
'நீங்கள் இறப்பதற்கு முன்னர் என்ன செய்யப்போகிறீர்கள்?!' எனும் கேள்வி அத்தனை சாதாரணமானது இல்லை. நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் போது 'நீங்கள் இறப்பதற்கு முன்னர்..' என ஆரம்பிக்கும் கேள்வியை கேட்கலாம்... அதுவே விமான நிலையத்துக்குள் நுழைகிறீர்கள்.. இன்னும் சற்று நிமிடத்தில் ஆகாயத்தில் பறக்கவிருக்கிறீர்கள்... அப்போது உங்கள் கடைசி ஆசை என்ன என கேட்டால்????
அப்படி ஒரு கிறுக்குத்தனம் ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆரம்பித்துவிட்டன..! Before I die என்பது என்னவகை கலாச்சாரமோ தெரியவில்லை... தொடருந்து நிலையங்கள் பேருந்து நிலையங்கள் உட்பட பல முக்கியமான இடங்களில் எல்லாம் எழுதி தள்ளுகிறார்கள். அமெரிக்க ஓவியர் ஒருவரின் வேலை தான் இது. இதுவரை உலகம் முழுவதும் 70 நாடுகளில் 1000 தடவைகளுக்கு மேல் இந்த Before I die எனும் வாக்கியத்தை எழுதியாகிவிட்டது.
அது விளையாட்டோ.. பொழுதுபோக்கோ... கலையோ.. எதுவாக இருந்தாலும் அது வெளிநாடுகளில் இருந்த வரை ஓகே. ஆனால் இப்போது அது பிரான்சுக்குள் பரிசுக்குள் நுழைந்திருக்கிறது. Gare de Lyon நிலையத்துக்குள் நுழையும் ஒவ்வொருவரும் பார்க்கக்கூடிய வகையில் பெரிதாக அச்சடித்திருக்கிறார்கள்!
கடந்த 18 மாதங்களில், பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் இறந்திருக்கும் இந்நிலையில்... எப்போது என்ன நடக்கும் என உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலையும் நிலையில்... இந்த 'கடைசி ஆசை' தேவைதானா?