Paristamil Navigation Paristamil advert login

36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்

36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்

30 சித்திரை 2025 புதன் 10:24 | பார்வைகள் : 165


அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான தகவல் உளவுத்துறையிடம் இருந்து கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.

இந் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு ஆக்கிரமிப்புக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும். பிராந்தியத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும்.

பஹல்காம் தாக்குதலை வைத்துக் கொண்டு அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை மூலம் நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்