Paristamil Navigation Paristamil advert login

'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Marion Cotillard!!

'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Marion Cotillard!!

8 ஆவணி 2016 திங்கள் 11:00 | பார்வைகள் : 18451


எவருக்கும் வெற்றியத்தொட அதிஸ்ட்டம் மட்டுமே துணையிருக்காது. கடின உழைப்பும் தன் துறையில் உள்ள ஈடுபாடுமே ஒருவரை வெற்றியாளராக மாற்றுகிறது. சிகரம் தொட்ட மனிதர்களில் இன்று, Marion Cotillard!! பிரெஞ்சு மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் இவர், முதன் முறையாக பிரெஞ்சு தேசத்துக்கு ஆஸ்கார் விருதை பெற்றுத்தந்தவர் ஆகும்! 
 
செப்டம்பர் மாதம் 30 திகதி, 1975 இல் பிறந்த இவருக்கு, வரும் மாதத்தோடு 40 வயது பூர்த்தியாகிறது. Marion பரிசில் பிறந்தார். சிறுவயது முதலே நாடகம் நடிப்பு நடனம் பாடும் திறமை என வீட்டுக்குள்ளேயே கலையைக்கற்றவர், சிறு வயதிலேயே திரையில் தோன்றினார். Les Jolie Choses எனும் திரைப்படத்தில் Lucie, Marie என இரட்டைக்கதாப்பாத்திரத்தில் நடித்து, அதற்காக பிரெஞ்சு தேசத்தின் கெளரவ விருதான Cesar விருது பெற்றுக்கொண்டார். 
 
2003இல்,  Big Fish திரைப்படம் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்தார். படம் அதிரி புதிரி ஹிட்! 'La Vie en Rose' எனு திரைப்படத்துக்கு ஆல்ஸ்கார் விருது கிடைத்தது. யாரும் எதிர்பார்க்காத விருது. விருது வழங்கப்படும் விழாவில் சற்றும் விருதை எதிர்பார்க்காத Marion, மேடையில் என்ன பேசுவது என தடுமாறி நின்றார். ஆனால் கைதட்டல்கள் அவரை உற்சாகமடையச் செய்து பேச வைத்தது!! அந்த விருது Marionக்கு மட்டுமில்லாமல் பிரெஞ்சு தேசத்துக்கே பெருமை சேர்ந்தது. காரணம் அதுதான் பிரெஞ்சு தேசத்துத்து சினிமா வரலாற்றில் கிடைக்கப்பட்ட முதல் 'ஆஸ்கார்' விருது!! 
 
உலகமே கொண்டாடும் இயக்குனர் Christopher Nolan இயக்கத்தில் வெளியான Dark Knight Rises திரைப்படத்தில் நடித்தார்.  உலக திரைப்பட ரசிகர்கள் எல்லாம் Marionஐ கொண்டாட ஆரம்பித்தார்கள். 
Public Enemies (2009), Nine (2009) மற்றும் Inception (2010) போன்ற மிகப்பிரபலமான திரைப்படங்களில் எல்லாம் நடித்தார். வெற்றியில் உச்சியில் ஒய்யாரமாய் நின்றிருந்தார். இறுதியாக தனது 39வது வயதில் கடந்த வருடம் Macbeth எனும் திரைப்படத்தில் நடித்தார்! 
 
முன்னர் சொன்னதுபோல் வெற்றிகள் வெளியில் பகட்டாய் தெரியும், அதன் பின்னால் ஆணிவேராய் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் கட்டாயம் இருக்கும்! அதன்பொருட்டே Marion Cotillard சிகரம் தொட்ட மனிதர் ஆனார்!! 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்