Paristamil Navigation Paristamil advert login

மே தின பேரணி : Place d'Italie முதல் Place de la Nation வரை!!

மே தின பேரணி : Place d'Italie முதல் Place de la Nation வரை!!

30 சித்திரை 2025 புதன் 13:58 | பார்வைகள் : 275


நாளை மே 1, வியாழக்கிழமை இடம்பெற உள்ள மே தின ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரிசில் நாளை மே 1, பிற்பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் 13 ஆம் வட்டாரத்தின் Place d'Italie பகுதியில் ஆரம்பமாக உள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளன. அங்கிருந்து Boulevard de l'Hôpital வழியாக Place Valhubert பகுதிக்குச் சென்று இறுதியாக Place de la Nation  இனைச் சென்றடைய உள்ளனர்.

பரிஸ் காவல்துறையினர் , 'போக்குவரத்து ஒழுங்குகள்' மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகள் வெடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்