சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!

30 சித்திரை 2025 புதன் 14:58 | பார்வைகள் : 1967
சட்ட விரோதமாக தங்கியவர்களை வெளியேற்றும் வகையில் தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் விசா காலம் முடிந்த பின்பும் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அனைத்து மாநில அரசுகளும் இதுதொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளன. நேற்றுடன் மத்திய அரசு அளித்திருந்த காலக்கெடுவும் முடிந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, விசா முடிந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
அவர்களை உடனடியாக வெளியேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம். க்யூ பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானியர்கள் மட்டும் அல்லாமல், வங்கதேசத்தினர், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விசா முடிந்தும் தங்கி இருப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களை அடையாளம் கண்டு, எப்படி வெளியேற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025