Paristamil Navigation Paristamil advert login

கடலுக்குள் ஒரு நூதன 'சைக்கிள்' ஓட்ட போட்டி!

கடலுக்குள் ஒரு நூதன 'சைக்கிள்' ஓட்ட போட்டி!

7 ஆவணி 2016 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 18331


வாழ்த்துக்கள் தோழர்கள்! நிச்சயம் உங்கள் புதிய முயற்சி வெற்றியளிக்கும்! 
 
 Michael de Lagarde, Antoine Delafargue இருவரும் tour de france சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள். எவ்வளவு காலத்துக்குத்தான் தரையிலேயே சைக்கிள் ஓட்டுவது?? வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என யோசித்து, எடுத்த முடிவுதான் கடலில் சைக்கிள் ஓட்டலாம் என்பது. அது எப்படி சாத்தியம்? இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நீர்மூழ்கியை வடிவமைத்தார்கள். அதற்குள் இரண்டே இரண்டு பேர் தான்  இருக்கலாம். 'இருக்கலாம்' என்று கூட சொல்ல முடியாது... படுத்துக்கொண்டிருக்கவேண்டும். அவ்வளவு சிறியது. இரண்டு 'பெடல்கள்' மூலம் காலால் மிதித்தால்... நீர் மூழ்கி முன்னே நோக்கி பாயும். இதோ அதை தயார் செய்துகொண்டு கிளம்பிவிட்டார்கள். 
 
பிரான்சின் St-Malo பகுதியில் இருந்து பிரித்தானியாவின் Plymouth பகுதிக்கு, கடலுக்கு அடியில் இந்த நீர்மூழ்கி மூலம் 'பெடல்' செய்துகொண்டே செல்லவிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் என்று கேட்கவில்லையே??!! 158 மைல்கள். அதாவது 247 கிலோ மீட்டர்கள்! 
 
இரு நண்பர்களும் இஞ்சினியர்கள் ஆகும். Tour de france போட்டிகளின் போது இருவரும் ஒரே சம அளவில் கலோரிகளை எரித்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களே வடிவமைத்த சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் தான் தற்போது கடலைக் கடந்துகொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் இவர்களில் 'லைவ் அப்டேட்'க்கு லைக்ஸ் பிய்த்துக்கொள்கிறது!! 
 
வாழ்த்துக்கள் தோழர்கள்! நிச்சயம் உங்கள் புதிய முயற்சி வெற்றியளிக்கும்!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்