நைஜீரியாவில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - வழக்கில் கைதான ஹெங்காரி அமைச்சர்

30 சித்திரை 2025 புதன் 12:28 | பார்வைகள் : 186
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்த மெக் அல்பர்ட் ஹெங்காரி பதவி நீக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சரை பதவி நீக்கம் செய்வதாக நைஜீரியா அதிபர் நெடும்போ நந்தி நதைத்வா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர், 2020ஆம் ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மெக் அல்பர்ட் ஹெங்காரி மீது கடத்தல், இலஞ்ச ஊழல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அமைச்சர் பதவியிலிருந்து அல்பர்ட் ஹெங்காரி நீக்கப்பட்டுள்ளார்.
விண்ட்ஹோக்கில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் அல்பர்ட் ஹெங்காரிக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கினை வாபஸ் பெறுமாறு தற்போது 21 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தி, அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை (26) கைது செய்யப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து, ஹெங்காரி திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அத்துடன், ஹெங்காரி மற்றும் இந்த வழக்கில் கைதான ஏனைய சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே, ஹெங்காரி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.