கோதுமை அல்வா

30 சித்திரை 2025 புதன் 14:59 | பார்வைகள் : 117
குழந்தைகளுக்கு ஆரோகியமான சுவையில் கோதுமை அல்வா வீட்டிலியே செய்து கொடுக்கலாம். இந்த கோதுமை அல்வா செய்ய நான்கு பொருட்கள் போதும். ஒரு வாரத்திற்கு வைத்திருந்த சாப்பிடலாம்.
செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு, நெய், முந்திரி, சர்க்கரை. ஒரு பவுல் பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் அரை கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும்.
பின்பு அடுப்பில் கடாய் வைத்து அரை கப் அளவிற்கு நெய் சேர்த்து, முந்திரி பருப்பினை நன்றாக வதக்கி எடுத்து இதில் கோதுமை மாவு கலவையை ஊற்றி நன்றாக கலக்கவும். பின் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை கொட்டினால் நன்றாக வேகவைத்தால் கோதுமை அல்வா ரெடியாகிவடும்.
பின் கொஞ்சம் சர்க்கரை ஒரு பாத்திரத்தில் எடுத்து சூடு படுத்தினால் ஆரஞ்சு கலந்த அரக்கு நிறத்தில் கலர் மாறும். அதனை அல்வாவில் கொட்டி சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு முந்திரியை சேர்த்து கொஞ்சம் நேரம் கிண்டி எடுத்தால் அல்வா தயாராகிவிடும் இப்படி வீட்டில் செய்யப்படும் அல்வாவை ஒரு வாரத்திற்கு கூட அப்படியே வைத்து சாப்பிடலாம் முதல் நாள் சுவையிலேயே இருக்கும்.