மீண்டும் வசிப்பிடவரி இல்லை: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்!

30 சித்திரை 2025 புதன் 13:36 | பார்வைகள் : 987
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், வீட்டு வாடகை வரியை (taxe d’habitation) மீண்டும் கொண்டு வர விரும்பவில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்த வரி 2023ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திட்டமிடல் அமைச்சர் ரெப்ஸமேன் ஒரு சிறிய பங்களிப்பை பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்நபோதும், அரசு பேச்சாளர் சோபி பிரிமாஸ் அதை மறுத்து, 2026 பட்ஜெட் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வேலைவாய்ப்பு அமைச்சர் கேதரின் வோத்ரான், நகரசபை சேவைகளுக்கு பங்களிக்காதவர்களை குறிவைத்து "எதுவும் இலவசமில்லை" என கூறியுள்ளார்.
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, ஜூலை மாதத்தில் அரசின் முழுமையான நிலைப்பாட்டை அறிவிப்பார் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டு வாடகை வரிக்கு பதிலாக ஒரு புதிய சிறிய பங்களிப்பு யோசனை மட்டுமே தற்போது விவாதத்தில் உள்ளது.