பன்றி இறைச்சியால் கடைக்காரருக்கு வந்த குழப்பம்!!
6 ஆவணி 2016 சனி 12:26 | பார்வைகள் : 19573
இது ஒரு புதுவிதமான சிக்கல்.. பொதுவா, சின்னப்பசங்களுக்கு சிகரெட் விக்குறாங்க... அப்பிடி இப்பிடின்னு எதாச்சும் வழக்குகள் ஒரு கடை மீது சுமத்துவாங்க! ஆனா, இங்க ஒரு புதுவித 'கேஸ்' ஒன்றை எப்படி டீல் செய்வது என தெரியாமல் முழிக்கிறார் இந்த கடைக்காரர்! குறிப்பிட்ட ஒரு கடையில் பன்றி இறைச்சியும், வைனும் விற்கப்படவில்லை என ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
"ஒரு ஏரியாவில் இருக்கும் அங்காடியோட கடமை என்ன? அப்பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை விற்பனை செய்வதுதானே? நீ பாட்டுக்கு பன்றி இறைச்சி விற்கமாட்டேன், வைன் விற்கமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் சாப்பாட்டோடு வைன் அருந்துவதற்கு தொலை தூரம் போகவேண்டி உள்ளது." என ஒருவர் அக்கடை மீது காட்டமான கேள்வி எழுப்பி, விஷயத்தை உள்ளூர் மேயர் வரை கொண்டு சென்றுவிட்டார்.
பிரச்சனை என்னவென்றால், ஹாலால் இறைச்சிகள் மாத்திரம் தான் விற்பேன் என கடைக்காரர் அடம்பிடிக்கிறார். பன்றி இறைச்சி எங்களுக்கு 'ஆகாது' அதனால் பன்றி இறைச்சிக்கு விற்கமாட்டோம்!' என கடைக்காரர் தெரிவித்துள்ளார். புறநகர் வடக்கு பரிசில் உள்ள Good Price எனும் அங்காடியிலேயே இந்த குளறுபடி!
'நீ யாரா இருந்தால் என்ன? சமூகத்துக்கு தேவையானதை விற்கவேண்டும். இல்லையேல் கடையை இழுத்து மூடு!' என பிரச்சனை பெரிதாக போக, குறிப்பிட்ட கடைக்குச் சென்ற உள்ளூர் மேயர், 'கடையின் ஒரு பகுதியில் மதுபானங்கள் விற்பதற்காக ஒதுக்கவும்' என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்! பன்றி இறைச்சி குறித்த பிரச்சனையை பின்னர் பார்கலாம் என இரு தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
நம்மவர்கள் யாராச்சும் அங்க போய் இறைச்சிக் கடை ஒண்ணு போடுங்கப்பா!!