கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் அஸ்வத் மாரிமுத்து...?

30 சித்திரை 2025 புதன் 17:29 | பார்வைகள் : 161
அசோக் செல்வன் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'ஓ மை கடவுளே' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'டிராகன்' படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தில் தனது நண்பனான பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்தார். மேலும் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், இவானா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த குறுகிய பட்ஜெட் படமான டிராகன் படத்தை இயக்கினார். வித்தியாசமான கதை, காதல், ரொமான்ஸ், என்று எல்லா அம்சங்களையும் கொண்ட பக்கா கமர்ஷியல் படமாக மாறியது. அதோடு உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.152 கோடி வரையில் வசூல் குவித்தது.
டிராகன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே சிம்புவின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சிம்பு நடிப்பில் உருவாகும் 51ஆவது படமான காட் ஆஃப் லவ் (God of Love) படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தான் இப்போது சிம்புவை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் தக் லைஃப் படம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால், சிம்பு மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே சிம்புவின் அறிமுகம் கிடைத்த நிலையில் அவர் மூலமாக, கமல் ஹாசனை சந்தித்து கதை சொல்லியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கமல்ஹாசனும் ஓகே சொன்னதால் ஓடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.