பரிஸ் : நாளை முதல் புதிய சட்டம்.. குற்றப்பணம்!!

30 சித்திரை 2025 புதன் 19:17 | பார்வைகள் : 2794
நாளை மே 1, வியாழக்கிழமை முதல் பரிசில் புதிய போக்குவரத்து விதி நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பில் மகிழுந்து ஓட்டுனர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘கார்பூலிங்’ என அழைக்கப்படும் மகிழுந்தில் பிற பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் covoiturage சாரதிகளுக்கு விசேடமாக ஒரு பகுதி வீதியில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கார்பூலிங் முறையில் பயணிப்பவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது இதுபோன்று சாலையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது கார்பூலிங் மகிழுந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பயணிக்கும் ஏனைய மகிழுந்துகள் மீது குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணியில் இருந்து 10.30 மணி வரையும் பின்னர் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும். மீறிவோருக்கு 135 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.