ஏசி வெப்பநிலையை 18 டிகிரியில் வைத்து இயக்கினால் எவ்வளவு மின்சாரம் செலவாகும்?

30 சித்திரை 2025 புதன் 21:16 | பார்வைகள் : 143
ஏசி வெப்பநிலையை 18 டிகிரியில் வைத்து இயக்கினால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள்.
அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும்.
இந்நிலையில் ஏசியில் இயக்கப்படும் வெப்பநிலையை பொறுத்து மின்சார கட்டணம் குறைவாக வருவதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் உங்களது ஏசியின் வெப்பநிலையை 18 டிகிரியில் வைத்தால் கம்ப்ரசர் நீண்ட நேரம் இயங்கும். இதுவே நீங்கள் 24 டிகிரியில் வைத்தால் கம்ப்ரசர் குறைந்த நேரத்திற்கு இயங்கும்.
18 டிகிரியில், ஒரு நாளைக்கு 13 கிலோவாட்-மணிநேர மின்சாரம் நுகரப்படுவதால் மாதத்திற்குச் செலவாகும் தொகை ரூ.1,767 ஆகும்.
24 டிகிரி வெப்பநிலையில், ஒரு நாளைக்கு 10.5 கிலோவாட்-மணிநேர மின்சாரம் நுகரப்படுவதால் மாதத்திற்கு மாதத்திற்குச் செலவாகும் தொகை ரூ.1,425 ஆகும்.
27 டிகிரி வெப்பநிலையில், ஒரு நாளைக்கு 9 கிலோவாட்-மணிநேர மின்சாரம் நுகரப்படுவதால் மாதத்திற்கு மாதத்திற்குச் செலவாகும் தொகை ரூ.1,223 ஆகும்.