காடுகளில் பூக்களை கடத்துபவர்களுக்கு €45,000 வரை அபராதம்!

30 சித்திரை 2025 புதன் 22:17 | பார்வைகள் : 701
மே 1 இல் மக்கள் லில்லி பூக்களை குடும்பத்தினருக்கு கொடுப்பதற்காக பூக்கள் அதிகம் காணப்படும் ஓய்ஸ் (Oise) காடுகளில் பூப்பறிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் சிலர் விற்பனைக்காக அதிக அளவில் பூக்களை சேகரித்து, சுற்றுச்சூழலை சேதப்படுத்துவதோடு சட்டத்தையும் மீறுகின்றனர்.
அரசு காடுகளில் ஒருவருக்கு 10 முதல் 15 பூக்கள் வரை மட்டுமே சேகரிக்க அனுமதி உண்டு. மேலும் வேரில் உள்ள கிழங்கு பகுதிகளை சேதப்படுத்தாமல் வெட்ட வேண்டும் என்பதும் விதியாகும்.
ஆனால் சிலர் பெரிய பைகளில் அதிக அளவில் பூக்களை சேகரித்து விற்பனை செய்வதால், இது குற்றமாக கருதப்படுகிறது. இந்த விதிகளை மீறுவோருக்கு €135 முதல் €45,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் உயிரியல் பூங்காவில் பூக்கள் சேகரிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு விதிகளை மீறுவோருக்கு பல ஆயிரம் யூரோக்களை அபராதமாக செலுத்த நேரிடும். தேசிய வனவியல் அலுவலகம் (l’Office national des forêts) மற்றும் சுற்றுச்சூழல் காவல் துறைகள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.