இஸ்லாமியர்களை அவமதிக்கும் மெலோன்சோன்!!

1 வைகாசி 2025 வியாழன் 00:00 | பார்வைகள் : 330
ஜோன்-லுக் மெலோன்சோனை விட யாரும் இஸ்லாமியர்களை அவமதித்திருக்க முடியாது என, பிரபல ஊடகவியலாளரான அலெக்சோந்த்ர் துவிச்சியோ (Alexandre Devecchio) தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்,
«ஜோக்-லுக் மெலோன்சோன் இஸ்லாமியர்களிற்காக முதலைக் கண்ணீர் விட்டுள்ளார்»
«ஒரு கொலையைத் தன் அரசியல் ஆயுதமாக்கியிருக்கும் மெலோன்சோன் வெறும் நடிப்பை வெளியிட்டுள்ளார்»
«அழுவது போல் நடித்துக் கொண்டே, அங்கு உரையாற்றிய இஸ்லாமியர்கள் தனது பெயரை உச்சரித்த போதெல்லாம், தன்னுடன் நின்ற தனது கட்சியைச் சேர்ந்த சேர்ந்த முக்கியமானவர்களை முழங்கையால் இடித்து நமட்டுச் சிரிப்பு சிரித்துள்ளார்»
«இந்த நமட்டுச் சிரிப்பை தனது பெயர் சொன்னபோதெல்லாம் தொடர்ந்துள்ளார் மெலோன்சோன். மற்றைய நேரங்களில் முதலைக் கண்ணீர் வடித்தார்»
«இதனை நான் கண்கூடாகப் பார்த்தேன் என அலெக்சோந்த்ர் துவிச்சியோ தெரிவித்துள்ளார்»
«அங்கு இவருடன் நின்ற இஸ்லாமியரை விட, வெளியிலிருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் மெலோன்சோனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை»
எனவும் தெரிவித்துள்ளார்