Paristamil Navigation Paristamil advert login

பாக்., ரத்தத்தில் ஊறிய பயங்கரவாதம்... பஹல்காம் சதித்திட்டம்... பகல் போல் வெளிச்சம்!

பாக்., ரத்தத்தில் ஊறிய பயங்கரவாதம்... பஹல்காம் சதித்திட்டம்... பகல் போல் வெளிச்சம்!

1 வைகாசி 2025 வியாழன் 10:06 | பார்வைகள் : 185


காஷ்மீரை உரிமை கொணடாடும் பாகிஸ்தான் எப்போதுமே அப்பகுதியின் நலனை விரும்பியதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் களமாக, காஷ்மீரை பயன்படுத்துவது மட்டுமின்றி, அப்பகுதியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது. இதை விரும்பாத பாகிஸ்தான் தற்போது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அடைக்கலம் கொடுப்பது மற்றும் பயங்கரவாதிகளை அனுப்புவது போன்றவற்றில், பாகிஸ்தானின் கைங்கரியம் சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் - காபூல் வரை

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், மற்றும் பயங்கரவாத சித்தாந்தத்தின் ஏவுதளமாக பயன்படுத்தப்படுகின்றன.

* கடந்த 1999ம் ஆண்டு, பாகிஸ்தானில் ராணுவ புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்தார் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். முன்னதாக, அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது, கார்கில் ஊடுருவல் நடந்தது. பின், நடந்த போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடியது.

* இந்தியாவுடன் போரிடுவதற்காக, பயங்கரவாத குழுக்களுக்கு, பாக்., ராணுவம் பயிற்சி அளித்தது என பர்வேஸ் முஷாரப் பின்னர் ஒப்புக்கொண்டார். 'காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட, இந்தியாவை வற்புறுத்த இந்த திட்டத்தை தயாரித்தோம். சர்வதேச அளவில், இந்த பிரச்னையை பேசுபொருளாக மாற்றவும் விரும்பினோம். எங்கள் நடவடிக்கைக்கு, அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசு கண்ணை மூடிக்கொண்டது,'' என முஷாரப் தெரிவித்தார்.

* கடந்த 2008ம் ஆண்டு, நவ., 26ல் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். 10 பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், பாகிஸ்தான் பங்களிப்பு இருக்கிறது என அப்போது இந்தியா குற்றம் சாட்டியது. இதை முதலில் மறுத்தது பாகிஸ்தான். கடந்த 2018ல் இந்தியாவின் குற்றச்சாட்டை சரி என உறுதி செய்தார், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இந்த தாக்குதலில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த தஹாவுர் ராணா, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க தொழிலதிபர். தற்போது அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, இந்திய சிறையில் உள்ளார்.

* இதேபோல், புல்வாமா, பஹல்காம் தாக்குதல் சம்பவங்களிலும், பாகிஸ்தான் பங்கு உறுதியாக தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா முஹமது ஆசிப், வீடியோ உரையாடலில், 'பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரவளித்து வருகிறது' என, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

* காஷ்மீர் மட்டுமின்றி, 2008ல் ஆப்கன் காபூல் இந்திய துாதரகம், 2011ல் காபூல் அமெரிக்க துாதரகம் ஆகியவற்றிலும் தாக்குதல் நடத்தினர். ரஷ்யா, பிரிட்டன், ஈரான் என பல்வேறு நாடுகளிலும் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

* பாகிஸ்தானின் ரத்தத்தில் ஊறியது பயங்கரவாதம். இதில் இருந்து பாகிஸ்தானை எந்த விதத்திலும் பிரிக்க முடியாது. உலகின் மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டையும், யாராலும் மறுக்க முடியாது.

ஒசாமா ஒளிந்திருக்க உதவி

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்திய சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் இருந்தவாறே உலகளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். அமெரிக்க படைகள் அபோதாபாத்தில் தாக்குதல் நடத்தி, ஒசாமா பின் லேடனை ஒழித்துக்கட்டிது. இந்த அபோதாபாத்தில் தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சிக் கல்லுாரி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்