Paristamil Navigation Paristamil advert login

'பரிஸ் to நியூயார்க்' - 200 யூரோவில் பறக்கலாம்!

'பரிஸ் to நியூயார்க்' - 200 யூரோவில் பறக்கலாம்!

4 ஆவணி 2016 வியாழன் 12:11 | பார்வைகள் : 20552


நிச்சயமாக இது புதினம் தான்! ஏறிக்கொண்டே செல்லும் பொருளாதாரத்தில், ரயில் கட்டணங்களே விலையேறிக் கொண்டு செல்கிறது. அப்படியிருக்க, பரிசில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு வெறும் 200 யூரோ செலுத்தி விமானத்தில் செல்லலாம் என்றால்? நம்புங்கள் பாஸ்!!
 
உலகிலேயே மிக குறைவான கட்டனத்தில் விமான சேவைகளை வழங்கிவரும் Norwegian நிறுவனம் தான் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறதாம். பரிசின் சாள் து கோல் விமான நிலையத்தில் இருந்து, நியூயார்க்கின் JFK சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடியாக பயணத்தை மேற்கொள்ள விமான டிக்கெட்டின் விலை வெறும் 175 யூரோக்கள் தான். இதன் முதல் விமான சேவை கடந்த ஜூலை 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருதது. 
 
ஆனால் இந்த சேவை தினமும் இல்லை. எப்போதெல்லாம் இந்த சேவைகள் உள்ளது என தெரிந்துகொள்ள அவர்களின் இணையத்தளத்தை அடிக்கடி நோட்டம் விடவேண்டும். மாதத்திற்கு நான்கு சேவைகள் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதோ.. கோடை விடுமுறையில் பாதிக்கிணற்றை தாண்டிவிட்டோம். மீதி தாண்டுவதற்குள், நியூயார்க் சிட்டிக்கு ஒரு விஸிட் அடிக்கலாமே?!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்