தொடருந்துப் பணி நிறுத்தம் - இறுதி நிலவரம்!!

1 வைகாசி 2025 வியாழன் 10:18 | பார்வைகள் : 677
மே மாதத்தில் SNCF தொடருந்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் பெரும் போக்குவரத்துச் சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது.
மே 8 விடுமுறையின் நீண்ட வார இறுதிக்குப் பயணிக்க உள்ளவர்கள் பெரும் சிக்கலிற்கு உள்ளா உள்ளார்கள்.
இவர்களின் இறுதித் தகவலின் படி பயணச்சீட்டுப் பரிசோதகர்களின் வேலைநிறுத்தமானது தொழிற்சங்கங்களின் தகவற்படி மே 9 முதல் 11ம் திகதி வரையாகும்.
தொடருந்து ஓட்டுனர்களின் வேலை நிறுத்தமானது தொழிற்சங்கங்களின்படி 5ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றது.
இதனால் TGV INOUI, OUIGO ஆகியவை மே 5ம் திகதியிலிருந்து 11ம் திகதி வரை பெரிதும் தடைப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முற்கூட்டியே பதிவு செய்தவர்கள் வேறு திகதிகளிற்கு மாற்றவோ அல்லது பணத்தை மீளப்பெறவோ தற்பொழுதிலிருந்தே செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.