சிறையில் இருப்பவருக்கு வந்த சோதனை..!!
3 ஆவணி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 19206
சிறையில் இருப்பதே பெரும் சோதனை... அங்கு போனதுக்கு பின்னரும் புதிய சோதனைகள் வந்தால் யார்தான் என்ன செய்வது! இந்த சம்பவத்தை கேளுங்களேன்..!!
தெற்கு பிரான்சின் Villeneuve-lès-Maguelone நகரில் வசித்த ஒருவரை, போதைப்பொருள் விற்றதாக சொல்லி சில மாதங்களுக்கு முன்னர் சிறையில் தூக்கி போட்டுவிட்டார்கள். அதன் பின்னர் அவருடைய BMW காரை காவல்துறையினர் கண்காணிப்பு வாகனமாக பயன்படுத்தினார்கள். (காவல்துறையினருக்கு அந்த உரிமை உண்டு) அதன் பின்னர் நடந்தது தான் கூத்து!
குறிப்பிட்ட அந்த காரினுடைய உரிமையாளர் சிறையில் இருக்கிறார் அல்லவா.. அவருக்கு, "நீங்கள் குறிப்பிட்ட சாலையில் அதிவேகமாக சென்றுள்ளீர்கள் அதனால் உங்களுக்கு இவ்வளவு தொகை அறவிடுகிறோம்!" என மின்னஞ்சல் மேல் மின்னஞ்சல் குவிந்துள்ளது. காரின் உரிமையாளர் எங்கு இருந்தால் என்ன.. கடமையே கண் என கடிதத்துக்கு மேல் கடிதம் அனுப்பி.. பல தடைவைகள் 'ஓவர் ஸ்பீட்'டில் சென்றுள்ளதால் உங்கள் ஓட்டுனர் உரிமத்தை இரத்துச்செய்கிறோம் என இறுதி நோட்டீசும் அனுப்பி விட்டார்கள்!
இதனால் கோபம் கொண்ட சிறையில் இருக்கும் நபர் தரப்பு வழக்கறிஞர்.. இது அநியாயம்... அக்கிரமம் என வாதாடி... காரினை பயன்படுத்துவது காவல்துறையினர் தான் என குறிப்பிட்டு காட்டியுள்ளார். இப்போது நீதிமன்றம் என்ன முடிவு எடுப்பது என்பது என மண்டையை உடைத்து வருகிறதாம். அட பாவமே!