ஆபத்து உள்ளது - தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

1 வைகாசி 2025 வியாழன் 11:19 | பார்வைகள் : 611
இன்றைய மே1 ஊர்வலங்களின் போது வன்முறையில் சிலர் ஈடுபடும் ஆபத்து உள்ளதென, பரிசின் தலைமைக் காவற்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று பிரான்சில் 250 இடங்களில் மேதின ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. இதில் பெரும் ஆபத்துக்கள் உள்ளன. இருப்பினும் காவற்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று பிரான்ஸ் முழுவதும் 100.000 இலிருந்து 150.000 பேர் வரை கலந்து கொள்ள்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பரிசில் மட்டும் 15.000 இலிருந்து 30.000 பேர்வரை பங்கு பெற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பரிசில் கலவரங்களில் 200 இலிருந்து 400 பேர் வரையும், லியோனில் 300 இலிருந்து 500 பேர்வரையும், நோந்தில் 50 இலிருந்து 100 பேர் வரையும் ஈடுபடலாம் எனவும் மற்றைய இடங்களில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே கலவரம் செய்யலாம் எனவும் காவற்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
இந்தக் கலவரங்களில் வெளிநாட்டு அமைப்புக்களும் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவற்றைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.