Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பகிடி வதையால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

இலங்கையில் பகிடி வதையால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

1 வைகாசி 2025 வியாழன் 11:18 | பார்வைகள் : 242


சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ன செய்திகள் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் சோர்ட்ஸ் அணிந்து நடமாடியதாக அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த காரணத்தை பொலிஸ் விசாரணைகளால் உறுதியாக வெளிப்படுத்தப்படவில்லை.

பகிடிவதையால் ஏற்பட்ட மரணம் என இதுவரை உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவன் உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும எனவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்