Paristamil Navigation Paristamil advert login

சென்-சன்-துனி - ஜனாதிபதித் தேர்தலிற்குத் தயார்!!

சென்-சன்-துனி - ஜனாதிபதித் தேர்தலிற்குத் தயார்!!

1 வைகாசி 2025 வியாழன் 14:03 | பார்வைகள் : 3512


93வது மாவட்டமான சென்-சன்-துனியின் நீண்டகாலப் பாராளுமன்ற உறுப்பினர் கிளிமோந்தின் ஒத்தோன் (Clémentine Autain) 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிற்குத் தயார் என அறிவித்துள்ளார்.

முன்னாள் La France insoumise  கட்சியிலிருந்த இவர் அதிலிருந்து வெளியேறியிருந்தார்.

«2027 ஆம் ஆண்டு மீண்டும் இடதுசாரிக் கட்டசிகளின் கூட்டணி அமையுமானால், அதில் நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவேன். அதற்கு நான் தயார். நமக்கு ஒரு பொதுவான அணுகுமுறை இருந்தால், இடதுசாரிகள் மற்றும் சூழலியலாளர்களுடன் (écologistes)  சேர்ந்து, முழு இடதுசாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக நான் இருப்பேன்»

என கிளிமோந்தின் ஒத்தோன் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்