Paristamil Navigation Paristamil advert login

ஜெருசலேம் அருகே காட்டுத்தீ - இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு

ஜெருசலேம் அருகே காட்டுத்தீ - இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு

1 வைகாசி 2025 வியாழன் 14:25 | பார்வைகள் : 179


ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.

கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ விரைவாக பரவியது. ஜெருசலேம் அருகே காட்டுத் தீ பற்றியதில், பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன.


ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அடக்க முயற்சிக்கின்றனர். தீ விபத்தில் சிக்கிய 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் 10 ஆண்டுகளில் மிக மோசமான தீ விபத்தாக இந்த சம்பவம் அறியப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் காடுகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்கு காற்று புறநகர்ப் பகுதிகளுக்கு நகரத்திற்குள் கூட கூட தீயை எளிதில் தள்ளும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

கிரீஸ், சைப்ரஸ், குரோஷியா, இத்தாலி மற்றும் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை இஸ்ரேல் உதவிக்காக அணுகியுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்