Paristamil Navigation Paristamil advert login

பரிசில் 760 ஆண்டுகள் பழைமையான வீடு!

பரிசில் 760 ஆண்டுகள் பழைமையான வீடு!

2 ஆவணி 2016 செவ்வாய் 11:22 | பார்வைகள் : 19052


பிரான்ஸ் எப்போதும் பழைமை விரும்பி! அதில் சந்தேகமே வேண்டாம்! எதெல்லாம் மிக பழைமையானதோ... அதையெல்லாம் அந்த பழைமை மாறாமல் பொத்தி பாதுகாப்பதே பிரான்சின் முதல் கடமை! சரி, பரிசில் 760 ஆண்டுகள் பழைமையான ஒரு வீடு உள்ளது.. உங்களுக்குத் தெரியுமா?
 
பரிசின் மூன்றாம் வட்டாரத்தில், Etienne Marcel Métro ஸ்டேஷன் அருகாமையில் அமைந்துள்ள எழுத்தாளர் Nicolas Flamel'இன் வீடுதான் அது! முழுக்க முழுக்க கல்லால் கட்டப்பட்ட வீடு இன்றுவரை சேதங்கள் எதுவும் ஏற்படாமல் பத்திரமாக உள்ளதாம். ஆனால் நீங்கள் இதை விடவும் மற்றுமொரு பழமை வாய்ந்த வீட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வீடு 760 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1257 ஆண்டு கட்டப்பட்டது.
 
அதிக தூரம் இல்லை. அதே தெருவில், ஐந்து நிமிட நடையில் சென்றுவிடலாம் அந்த வீட்டிற்கு. Arts et Métiers Métro நிறுத்தத்துக்கு அருகில் உள்ள சைனீஸ் உணவகத்துக்கு அருகில் உள்ளது. 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வீடுதான் பரிசில் மிக பழமையான வீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இரண்டு வீடுகளையும் ஒரே 'விஸிட்'டில் பார்வையிடலாம். விடுமுறை தானே.. ஒருதடவை சென்று பார்த்துவிட்டு வாங்களேன்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்