Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கோர விபத்து - இருவர் பலி - 30 பேர் காயம்

இலங்கையில் கோர விபத்து - இருவர் பலி - 30 பேர் காயம்

1 வைகாசி 2025 வியாழன் 16:14 | பார்வைகள் : 3620


இலங்கையில் இன்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னேரியா - ஹபரணை வீதியில், இராணுவ முகாமுக்கு முன்னால் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. 

குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இலங்கையில்  வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படவுள்ளது. 

இதற்கான கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வீதிப் பயன்பாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்