Paristamil Navigation Paristamil advert login

சிகரம் தொட்ட மனிதர்கள் : Charles-Michel de l'Épée!

சிகரம் தொட்ட மனிதர்கள் : Charles-Michel de l'Épée!

1 ஆவணி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 18355


நல் எண்ணங்களும் சிந்தனைகளும் போதிக்கப்பட்டு வளரும் குழந்தைகள்... எதிர்காலத்தில் சமூகத்துக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆசானாகவும் மாறுவிடுவது உண்டு. சிறுவயதில் நேர்மையாக நல் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்ட Charles-Michel de l'Épée, பின்நாட்களில் காது கேளாதவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்! சிகரம் தொட்ட மனிதரானார்!! 
 
Charles-Michel de l'Épée. சுருக்கமாக l'Épée.  பிறந்தது பிரான்சின் Versailles நகரில். நவம்பர் 24, 1712ல் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே ஒரு கிருஸ்தவ பாதிரியாராக வரவேண்டும் என ஆசைப்பட்டவர். பெரும் செல்வந்தராக திகழ்ந்தும் எந்த கெட்ட சிந்தனைகளுக்குள்ளும் தடுமாறாமல் அவரின் லட்சியத்தை நோக்கி வளர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்நாட்களில் அவர் பாதிரியராக வரமுடியவில்லை. (அவருக்கு பிரதிஷ்ட்டை வழங்க மறுத்துவிட்டனர்)
 
வாழ்க்கையில் ஒரே லட்சியம் என பயணித்த l'Épéeக்கு, லட்சியப்பாதையின் கதவு திறக்கவில்லை என்றானதும், சட்டக்கல்வி பயின்றார். அதன் பின்னர் அவரின் இரக்க குணமும் நேர்மையும், தன் கட்சிக்காரருக்கு சார்பாக பேச முன்வரவில்லை. அத்தொழிலை விட்டொழித்து, ஏழைகளுக்கு தொண்டு வேலைகளை பார்ப்பதில் கவனம் செலுத்தினார். அப்போது வாழ்க்கை அவருக்கு திருப்தியாக இருந்தது. 
 
பரிசில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் தொடர்ச்சியாக செய்து வந்த l'Épéeக்கு, காது கேட்க முடியாத இரண்டு சகோதரிகள் அறிமுகமானார்கள். அவர்களுடனான உரையாடலுக்கு சைகை மொழியை பயன்படுத்தினார். அவர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுத்தார். ஆனால் காது கேட்க முடியாத அவர்களால் கல்வியை சரிவர கற்க முடியவில்லை. கல்விமேல் அவர்களுக்கு இருந்த ஆர்வத்துக்கு காது கேளாமை ஒரு தடையாக இருப்பதை அவர் மனம் ஏற்கவில்லை.  
 
1760 ஆம் ஆண்டு, காது கேட்க முடியாதவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் ஒன்றினைத்து அனைவருக்கும் கல்வி போதித்தார்... நல் ஒழுக்கம் போதித்தார். மாற்றுத்திறனாளிகளாக இருப்பது ஒரு குறையல்ல... அது வரமே என மாணாக்களுக்கு புகட்டினார். அவரின் வாழ்நாள் மிக திருப்த்தியாக கழிந்தது. 
 
பின்னர் தான் 'உலகின் முதல் காது கேளாதவர்களுக்கான பாடசாலையை ஆரம்பித்தவர்!' என்ற பெருமை l'Épéeக்கு வந்து சேர்ந்தது. ஐந்தில் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் நாற்பதிலேயே அவரை சிகரம் தொட்ட மனிதராக்கியிருந்தது. பின்நாட்களில் அவர் Father of the Deaf என அழைக்கப்பட்டார். பின்னர், டிசம்பர் 23, 1789 ஆம் ஆண்டு தன் 77வது வயதில் பரிசில் காலமானார். அடைபட்டிருந்த காதுகள் அனைத்தும் திறந்துகொண்டன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்