Paristamil Navigation Paristamil advert login

பாப்பரசரை தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறாரா மக்ரோன்? புதிய சர்ச்சை!!

பாப்பரசரை தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறாரா மக்ரோன்? புதிய சர்ச்சை!!

2 வைகாசி 2025 வெள்ளி 00:01 | பார்வைகள் : 857


ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், மார்செய்யின் பேராயர் ஜான்-மார்க் அவலினை அடுத்த பாப்பரசராக தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறார் என இத்தாலிய வலதுசாரி பத்திரிகைகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

பாப்பரசர் பிரான்சிஸ் இறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, மக்ரோன் றோம் நகரில் நான்கு பிரஞ்சு கார்டினல்களுடன் மற்றும் Sant’Egidio அமைப்பின் நிறுவனர் ஆண்ட்ரியா ரிக்கார்டியுடன் இரவு உணவில் கலந்துகொண்டமை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக அமைந்தது.

Libero, La Verità மற்றும் Il Tempo போன்ற பத்திரிகைகள், இம்மானுவேல் மக்ரோன் "பாப்பரசரை தேர்ந்தெடுப்பதன்" மூலம் தனது சர்வதேச செல்வாக்கை மீட்டுக்கொள்ள நினைக்கிறார் என விமர்சித்துள்ளன. மேலும், தீவிர வலதுசாரியான இத்தாலிய பிரதமர் யோர்ஜியா மெலோனியுடனான அவரது "தனிப்பட்ட விரோதமும்"  இதில் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளனர்.

மார்சேய் பேராயரைச் சுற்றி ஒருமித்த கருத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து பிரெஞ்சு கார்டினல்களிடம் மக்ரோன் கேள்வி எழுப்பியதாக இத்தாலிய செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்