மூன்று மாவட்டங்களிற்கு புயல்மழை எச்சரிக்கை!!

2 வைகாசி 2025 வெள்ளி 01:20 | பார்வைகள் : 2827
பிரான்சின் வானிலை மையம் மூன்று மாவட்டங்களிற்கு கடும் புயல் மழை எச்சரிக்கை வழங்கி உள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மே 2ம் திகதி பிரான்சின் தென்மேறகுப் பகுதிகளில் கடும் மழை பெய்ய உள்ளது.
பிரான்சின் பெரும் பகுதி, நல்ல வெயில் காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மூன்று மாவட்டங்களும் புயல் மழைக்குள் சிக்க உள்ளன.
Gironde, Landes, Pyrénées-Atlantiques ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்தப் பகுதிகள் கருமேகங்களால் சூழப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025