சோசலிச கட்சியினர் மீது தாக்குதல்.. - உள்துறை அமைச்சர் கண்டனம்!!

2 வைகாசி 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 1732
சோசலிச கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது நேற்று மே தின ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் நால்வர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கட்சியின் அங்கத்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என இலக்கு வைத்து நேற்றைய தினம் தாக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டிருந்தது. இதில் நால்வர் காயமடைந்திருந்தனர். “ஒரு கட்டத்துக்கு மேலே சோசலிச கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டிருந்தனர். ஜனநாயக கட்சி ஒன்றின் மீது இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளுவது ஏற்க முடியாதது. இச்சம்பவத்தை நான் கண்டிக்க விரும்புகிறேன்!” என உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார்.
மே தின ஆர்ப்பாட்டத்தில் பரிசில் 29 பேரும், Nantes நகரில் 15 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.