Paristamil Navigation Paristamil advert login

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் சென்னையில் கைது!

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் சென்னையில் கைது!

2 வைகாசி 2025 வெள்ளி 05:43 | பார்வைகள் : 149


சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

சமீபத்தில், சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக பதுங்கி இருந்த, வங்கதேசத்தை சேர்ந்த, 33 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய வங்கதேசத்தினர், 33 பேரில், 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்