உலகின் தலைசிறந்த பத்திரிகை நிறுத்தப்பட்ட சோகம்!
 
                    31 ஆடி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 22771
வெற்றிகள் எப்போதும் நிரந்தரமானவை இல்லை! அது எப்போதும் தோள்கள் கடந்து பயணிக்கும்... பிரான்சின் மிக பிரபலமான பத்திரிகை ஒன்று தன்னை நிறுத்திக்கொண்டது. தேசங்கள் கடந்த பத்திரிகை ஒன்று தன் சேவையை நிறுத்திக்கொண்டது! 
Le Petit Parisien 
இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது 1876 இல். தலைமையகம் பரிசில் இருந்தது. மிக நேர்மையாகவும் துணிச்சலாகவும் அரசியலையும் சமூகத்தையும் வழிநடத்தியது. மக்கள் கருத்துக்களை அரசியல்தலைவர்களிடம் கொண்டு சேர்த்தது. மக்களுக்கு மிகப்பிடித்தமான பத்திரிகை ஆனது. அப்பகுதிகளில் தினமும் வெளிவரும் பத்திரிகைகள் அவ்வளவாக இல்லை. ஆனால் அந்த சாதனையை முறியடித்தது Le Petit Parisien. 
தினமும் வெளிவரும் இப்பத்திரிகை மக்களுக்கிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பிரான்ஸ் முழுவதும் பரவி.. பின்னர் ஐரோப்பாவுக்குள் கிளை விரித்தது. வருடங்கள் ஓடின... முதலாம் உலகப்போர் இடம்பெறும்போது... பல சிக்கல்களை பத்திரிகை சந்தித்தது. சூடான செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டது. தாள்களின் தட்டுப்பாட்டினால்... பக்கங்களை சுருக்கினாலும்... செய்திகளின் வீரியம் குறையவில்லை. 
முதலாம் உலகப்போர் முடிவடைந்ததும், மீண்டும் வீறுநடை போட்டது...! முதலாம் உலகப்போர் பற்றிய முழுமையான தகவல்கள் பாமரருக்கும் தெளிவாக புரியும் படி செய்திகளை தயாரித்தது. பத்திரிகை  'அமோக விற்பனை!' ஆனது! 1920 களில் ஒரு நாளைக்கு இருபது லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இரண்டாம் உலகப்போரின் போது மீண்டும் சிக்கல்...! இப்போது நாட்டு நடப்புகள் மேலும் தீவிரம் அடைந்ததால் பத்திரிகை திட்டமிட்டே முடக்கப்பட்டது. 
இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்கள் இழப்புகளை தொடர்ந்து 1944 ஆம் ஆண்டு பத்திரிகை தன்னை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது. 
(இப்பத்திரிகை ஒரு தடவை கோப்பி பவுடரில் செய்திகளை அச்சடித்ததாக ஒரு வரலாறு உண்டு. எந்த அளவு உண்மை என தெரியவில்லை!)
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan