Paristamil Navigation Paristamil advert login

அஜித் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?

அஜித் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?

2 வைகாசி 2025 வெள்ளி 11:35 | பார்வைகள் : 596


நடிகர் அஜித் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நான் சினிமாவில் இருந்து எந்த நேரத்திலும் ஓய்வு எடுக்கலாம். சில சமயங்களில் கட்டாயமாக ஓய்வெடுக்க நேரிடலாம். அது நான் திட்டமிடுகிற விஷயமல்ல” என தெரிவித்தார். இதையடுத்து, விஜய் போலவே அஜித்தும் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாழ்க்கையைப் பற்றி பலர் புலம்புகிறார்கள். ஆனால், தினமும் தூங்கி எழுந்து உயிருடன் இருப்பதே பெரிய வரம். எனக்கு பல அறுவை சிகிச்சைகள், காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலிருந்து நான் மீண்டுள்ளேன். என் நண்பர்கள் சிலர் புற்றுநோயை வென்று இருக்கிறார்கள். உயிருடன் இருப்பதே மிகப்பெரிய விஷயம். எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தம் இருக்க வேண்டும் போல அதை முழுமையாக பயன்படுத்த போகிறேன்.”

“என் வாழ்க்கை எந்த நேரத்தில் முடியும் என்று எனக்கு தெரியாது. எனக்கு உயிரைக் கொடுத்த கடவுள் திரும்ப அந்த உயிரை கேட்கும் போது, 'நான் முழுமையாக வாழ்ந்தேன்' என்ற திருப்தி எனக்கு இருக்க வேண்டும். எனவே வாழ்க்கையில் நேரத்தை வீணாக்காமல் முழுமையாக வாழ முடிவு செய்துள்ளேன்.”

“நான் நடிப்பு தொழிலுக்கு வருவேன் என்று நினைத்ததே இல்லை. அதிர்ஷ்டவசமாக நடிகராகி விட்டேன். 18 வயதில் பைக்கிங் தொடங்கினேன். விளம்பரப்படங்களிலும் பத்திரிகை புகைப்படங்களிலும் நடித்தேன். இப்போது முழுநேர நடிகனாகிவிட்டேன். இதன் பின்னர் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க, எந்த நேரத்திலும் சினிமாவில் இருந்து விலகுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அஜித் கூறிய இந்த வார்த்தைகள், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், உருக்கமான மனநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்