Amour : பிரெஞ்சு காதல் கோட்டை!!
 
                    30 ஆடி 2016 சனி 11:24 | பார்வைகள் : 22484
காதலுக்கும் பிரான்சுக்கும் உள்ள பிணைப்பு பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்தே இருக்கும். அப்படிப்பட்ட காதல் தேசத்தில் இருந்து ஒரு காதல் திரைப்படம் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? விடை : Amour திரைப்படம். 
வசனங்களில் காதலை சொல்லாமல், உணர்வுகளில் காதலை உட்புகுத்தி வலிமிகு பாசப்போராட்டத்தை செல்லுலாய்ட்டில் செதுக்கியவர் இயக்குனர் Michael Haneke. படத்தின் கதையை எழுதி திரைக்கதையை வடிவமைத்தவரும் அவரே. படம் வெளியான நாளில் இருந்து பெரும் பரபரப்பாய் பேசப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படம் காதலுக்கு புது அர்த்தம் கொடுத்தது. காதலர்களுக்குள் புது ரத்தம் பாய்ச்சியது. 
மே 20, 2012இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக இத்திரைப்படத்தை திரையிட்டுக்காட்டியிருந்தார்கள். அப்போது முதல் பரபரப்பாக பேசும் டாப்பிக் இந்த Amour திரைப்படம் தான். படம் எப்போது எப்போது என கேள்விகள் பறக்க..., அதே வருடத்தில் செப்டம்பர் 20 ஜெர்மனியிலும், ஒக்டோபர் 24 பிரான்சிலும் வெளியிட்டார்கள். படத்தைக்காண கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது. 
8.9 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், 29.9 அமெரிக்க மில்லியன்களை வசூலித்ததது. படத்தில் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து ரெக்கோர்ட் அடித்தது. தற்போது அதன் ஒரிஜினல் DVDக்கள் விற்பனையாகின்றன. காதல் பற்றிய சரியான புரிந்துணர்வுக்கு இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்படுகிறது. இது பிரெஞ்சு தேச 'காதல் கோட்டை!'
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan