பாடசாலைகளில் பாதுகாப்புக் கதவுகள் - மக்கள் ஆதரவு!

2 வைகாசி 2025 வெள்ளி 12:10 | பார்வைகள் : 2177
கொலேஜ் மற்றும் லிசேக்களில் நடக்கும் தாக்குதல்களையடுத்து, கொலேஜ் மற்றும் லிசேக்களில் பாதுகாப்புக் கதவுகள் (portiques de sécurité ) போடுவது பற்றியும், அவர்களிடம் ஆயுதம் இருந்தால் கண்டறியும் கதவுகளும் போடவேண்டும் என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
அண்மையில் நோந்தில் ஜுஸ்தன் எனும் இளைஞனின் கண்மூடித்தனமான கத்திக் குத்துத் தாக்குதலையடுத்து உள்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து CSA ஊடகங்களிற்காக செய்த கருத்துக் கணிப்பில், கொலேஜ் மற்றும் லிசேக்களில் பாதுகாப்புக் கண்காணிப்புக் கதவுகளைப் பொருத்துவதற்கு 79 சதவீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆதரவு தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களைவிட பெண்கள் பெரிதும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர் என இந்தக் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025