இலங்கையில் ஒருநாள் கடவுச்சீட்டு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
2 வைகாசி 2025 வெள்ளி 13:26 | பார்வைகள் : 2526
இலங்கையில் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இந்த சேவை நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திகதிகளில் ஏனைய சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan