ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

2 வைகாசி 2025 வெள்ளி 13:28 | பார்வைகள் : 178
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கூலி படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸாகிறது. அடுத்த ஆண்டு ஜெயிலர் 2 வெளியாகலாம். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி படத்தை தயாரிக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக இருக்கிறது. கிட்டத்தட்ட அந்த டீல் முடிந்துவிட்டது. விரைவில் முறைப்படி அறிவிப்பு என்கிறார்கள். சரி, இயக்குனர் யார் என்று விசாரித்தால் ஏகப்பட்டபேர் லைனில் இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் முதலில் இருக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், இப்போது சுந்தர்.சியும் போட்டிக்கு வந்துவிட்டாராம்.
ரஜினியை வைத்து அருணாசலம்( 1997) படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. இப்போது வேல்ஸ் நிறுவனத்துடன் நல்ல நட்பில் இருக்கிறார். அவர்கள் தயாரிக்கும் மூக்குத்திஅம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அந்த அடிப்படையில் அவரும் களம் குதிக்க, இன்னமும் ரஜினி யார் இயக்குனர் என்று முடிவெடுக்கவில்லையாம்.