Paristamil Navigation Paristamil advert login

Stains : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

Stains : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

2 வைகாசி 2025 வெள்ளி 14:06 | பார்வைகள் : 3822


Stains (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மே 1, நேற்று வியாழக்கிழமை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என அவரது உறவினர் ஒருவர் காவல்துறையினரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர்.

அதன்போது அவர் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்