பள்ளிவாசல் கொலையாளி குடும்பம் அச்சுறுத்தலில்!!

2 வைகாசி 2025 வெள்ளி 14:09 | பார்வைகள் : 1911
பள்ளிவாசலில் கொலைசெய்யப்பட்ட அபூபக்கர் சிசேயின் கொலையாளி, ஒலிவியேவின் குடும்பம் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி உள்ளதாக ஒலிவியோவின் தந்தை தெரிவித்துள்ளார்.
«எனது மகன் செய்தது பைத்தியக்காரத்தனம். அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்திடம் நான் ஏற்கனவே மன்னிப்புக் கோரி உள்ளேன்»
«எனது மகன் செய்த குற்றத்திற்காக, எங்கள் குடும்பத்தை அச்சுறுத்துவதும், கொலை மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் செய்வதையும்தயவு செய்து நிறுத்தி, நிம்மதியாக வாழவிடுங்கள்»
எனக் கொலையாளியின் தந்தை தெரிவித்துள்ளார்»
«எம்மால் நிம்மதியாக இங்கு வாழ முடியாமல் உள்ளது. நேரடியான அச்சுறத்தலும் தாக்குதலும் கூட நடந்துள்ளது. எங்களின் உயிரிற்கு அச்சுறுத்தல ஏற்பட்டுள்ளது»
«தயவு செய்து இதனை நிறுத்துங்கள்»
எனவும் கோரி உள்ளார்.