Cergy : வீதியில் வைத்து கத்திக்குத்து.. ஒருவர் பலி!!
2 வைகாசி 2025 வெள்ளி 14:18 | பார்வைகள் : 7293
மே 2, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீதியில் வைத்து இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Cergy (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் அதிகாலை 4.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் வீதியில் அவரது மகிழுந்துக்கு சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்துள்ளார். அதன்போது, அவரை மற்றொரு மகிழுந்து நெருங்கியது. அதில் இருந்து இறங்கிய சிலர், குறித்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் கத்தி ஒன்றினால் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அவசரப்பிரிவு மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan