Paristamil Navigation Paristamil advert login

மூளைக்காய்ச்சல் பரவும் ஆபத்து!!

மூளைக்காய்ச்சல் பரவும் ஆபத்து!!

2 வைகாசி 2025 வெள்ளி 15:16 | பார்வைகள் : 2235


மூளைக்காய்ச்சலான MÉNINGITE இனை ஏற்படுத்தும் பக்ரீரியாவான MÉNINGOCOQUES  தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரென் வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை 16 மற்றும் 19 வயதுடைய இருவர் மூளைக்காய்ச்சல் நோயினால் (méningite à méningocoques) வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுதத்தியவர் 50 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு அபாய மணியை அடித்துள்ளது.

மூளைக்காய்ச்சல் வந்துள்ள ஒரு இளைஞன், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு கேளிக்கைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுதே இவரிற்கு இந்தக் கொடிய பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். அதனாலேயே 50 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்வாய்ப்பட்டுள்ள மற்றைய இளைஞனும் அதே கேள்ளிக்கைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளானா என்பது இன்னமும் அறியப்படவில்லை எனவும், அது  விசாரிக்கப்பட்டும் வருகின்றது.

இந்த மூளைக்காய்ச்சல் நோய்க்கு (méningite à méningocoques சிறு குழந்தையிலேயே தடுப்பூசி உள்ளது. இது கட்டாயத் தடுப்பூசி அல்லாததால் நாங்களாகவே கேட்டுத் தடுப்பூசி போடுவது அவசியம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்