Paristamil Navigation Paristamil advert login

Wiko : இது ஒரு பிரெஞ்சு தயாரிப்பு!!

Wiko : இது ஒரு பிரெஞ்சு தயாரிப்பு!!

28 ஆடி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19340


பிரான்சில் அதிகளவு விற்பனையாகும் தொலைபேசிகளில் சாம்சங் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கே முதல் இடம். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தான் WIKO. proudly made in france. 
 
இன்று உலகம் முழுவதும் தனது விற்பனையை விஸ்தரித்துள்ளது wiko நிறுவனம். இரட்டை சிம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. 2013இல், 2.6 மில்லியன் தொலைபேசிகள் விற்று 'கில்லி' ஆடியது! 
 
2011இல் இத்தொலைபேசி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த நாள் முதலே ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தது. மார்செய் நகரை மையமாக கொண்டு இயங்கி வருகிறது wiko நிறுவனம். வடிவமைப்பு, ஏற்றுமதி போன்ற நடவடிக்கைகளும் மார்செய் நகரில் தான் செய்யப்படுகின்றன. பிரான்ஸ் தயாரிப்பு என்றாலும் இதன் உற்பத்தி கூடம் சீனாவில் தான் உள்ளது. 
 
2013இல், 7 வீத சந்தையை தனதாக்கிக்கொண்டது. அதற்கு அடுத்த வருடமே பிரித்தானியாவுக்கும், வியட்னாமுக்கும் விஸ்தரித்தது. கடந்த வருடம் பெல்ஜியத்திலும், இந்த வருடம் உகாண்டாவிலும் தனது விற்பனையை ஆரம்பித்துள்ளது. விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்நிறுவனம் விரைவில் முன்னனி நிறுவனங்களுடன் போட்டிபோட, அதிநவீன தொலைபேசிகள் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறதாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்