விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு?

2 வைகாசி 2025 வெள்ளி 17:56 | பார்வைகள் : 2451
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. சமீபத்தில் ஒரு வீடியோவில், சிம்புவின் 'பத்து தல' படத்தில் இடம் பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை மீண்டும், மீண்டும் கேட்பதாக கூறினார். பதிலுக்கு எஸ்டிஆரும் 'நீங்களும் சிங்கம்தான்' என அவரை வாழ்த்தினார்.
சமீபகாலமாக விராட் கோலி மாதிரியே வித்தியாசமான ஹேர் ஸ்டைல், தாடியுடன் காணப்படுகிறார் சிம்பு. அதனால், விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடிக்கப் போகிறார் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. விராட் கோலியாக நடிக்க சிம்பு மனதளவில் தயார் ஆகிவிட்டாராம்.
விராட் கோலி தரப்பு மனசு வைத்தால் அந்த படம், பான் இந்தியா படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்தவர் விராட் கோலி. அவர் வாழ்க்கை சினிமாவானால் அனுஷ்கா சர்மாவாக திரிஷா நடிக்கணும். சிம்பு, திரிஷா ஜோடி, அந்த காதல் காட்சிகள் சூப்பராக இருக்கும் என்பது ரசிகர்கள் பலரின் எண்ணம்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025