சுவையான வறுத்து அரைச்ச மீன் குழம்பு

2 வைகாசி 2025 வெள்ளி 19:08 | பார்வைகள் : 292
சாப்பாடு என்றலே பிரியாணி தான் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக முதலிடத்தில் இருக்கும். என்னதான் பிரியாணி எல்லாரோட ஃபேவரைட் உணவா இருந்தாலும் சுட சுட சாதத்துக்கு மீன் குழம்பு ஊத்தி சாப்பிடுற டேஸ்ட் விட கம்மிதான் என்று சொல்வார்கள் மீன் குழம்பு பிரியர்கள். மீன் குழம்புல பல்வேறு வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் அதுல ரொம்ப டேஸ்டியான வறுத்து அரைச்ச மீன் குழம்பு எப்படி செய்வது என்று இப்போ பாக்கலாம்.
தேவையான பொருட்கள்: ஒரு டேபிள் ஸ்பூன் வர மல்லி, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் கால் டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு, கருவேப்பிலை, தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,5 பல் பூண்டு, உப்பு ஒரு டேபிள் ஸ்பூன், புளி, ரெண்டு ஸ்பூன் எண்ணெய்,கடுகு, பச்சை மிளகாய் , இரண்டு தக்காளி, சின்ன வெங்காயம்.
செய்முறை: முதலில் வர மல்லி, மிளகு, சீரகம் வெந்தயம், காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு பூண்டு, உப்பு, தண்ணீருக்கு பதிலாக புளி தண்ணீரை சேர்த்து நைஸாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மீன் குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி,கடுகு போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு அரைத்து எடுத்த மசாலாவை சேர்க்க வேண்டும். அதோடு கொஞ்சம் போல தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பக்குவமான மீன் குழம்புக்கு மீன் குழம்பு மசாலாவை கரைக்கும் போது கொஞ்சம் கெட்டியாக கரைக்க வேண்டும். ஏனென்றால் கொதித்து வந்தவுடன் மீன் குழம்பு சற்று நீர்த்து போய்விடும். மிதமான தீயில் தான் மீன் குழம்பு கொதிக்க வேண்டும். அத்துடன் மீனை போட்டவுடன் குழம்பை முழுமையாக பாத்திரத்தை வைத்து மூடி வைக்காமல் காற்றோட்டத்துடன் மூடி வைத்து கொதிக்க வைத்தால் மீன் உடையாமல் இருக்கும். மீன் குழம்பு 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே கொதிக்க வேண்டும். இது போல் சின்ன சின்ன பக்குவத்தில் செய்தால் மீன் குழம்பு அட்டகாசமான சுவையில் ரெடி.