Paristamil Navigation Paristamil advert login

நிர்வாகத் தடுப்பு மையத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர்!

நிர்வாகத் தடுப்பு மையத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர்!

3 வைகாசி 2025 சனி 00:15 | பார்வைகள் : 636


மெட்ஸ் நகரித்திலுள்ள நிர்வாகத் தடுப்பு மையம் ஒன்றிற்கு உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ சென்றுள்ளார்.

CRA (Centre de rétention administrative) எனப்படும்  நிர்வகத் தடுப்பு மையங்கள், ஒருவரை அவரது நாட்டிற்கு பலவந்தமாக நாடுகடத்தவதற்காக, அல்லது அந்த நாட்டுக் காவற்துறையினரிடம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருப்போர் பாரிய குற்றங்கள் செய்ததால் பாதுகாப்பாக குற்வாளிகள் வைக்கப்பட்டு நாடுகடத்த வைக்கப்பட்டிருக்கும் தற்காலிகச் சிறையேயாகும்

நேற்று அங்கு சென்ற அமைச்சர், மேலும் நான்கு புதிய நிர்வாகத் தடுப்பு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன எனவும் அவை Dijon (Côte-d'Or), Dunkerque (Nord), Bordeaux (Gironde)ஆகிய நகரங்களிலும் நான்காவதாக கடல்கடந்த மாநிலத்திலும் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த நிர்வாகத் தடுப்பு மையத்தில் இதுவரை ஒருவரை 90 நாட்கள் மட்டுமே வைத்திருக்க முடியும். அதற்குள் அவர் திருப்பியனுப்பப்படாவிட்டால் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இதனால் பல ஆபத்தான குற்றவாளிகளை விடுவிக்கும் அபாயம் உள்ளது. அதனால் இந்த 90 நாட்கள் காலக்கெடுவை 210 நாட்களாக மாற்றியமைக்க உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்