பிரான்சில் ஒரு நிர்வாண நகரம்!

27 ஆடி 2016 புதன் 11:22 | பார்வைகள் : 23192
ஏன் இப்பிடில்லாம் பண்ணுறாங்க? என கிறுக்குப்பிடிக்கும் அளவுக்கு நம்மூர்காரங்க நடந்துக்கிறாங்க. இந்த விசித்திரத்த பாருங்களேன். ஒரு ஊருக்கு 'நிர்வாண உடல்கள்' என பெயர் வைத்துள்ளார்கள். ஊருக்குள் வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும், ஊரின் எல்லையில் நின்று நிர்வாணமாய் போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்!! என்ன வகை டிசைனோ இது?!
ஊரின் பெயர் Corps-Nuds. என்றால் நிர்வாண உடல்கள் என்று அர்த்தம். இப்பெயருக்கு பின்னால் பெரிய ஹிஸ்ட்ரி யோக்கிரஃபி ஒன்றும் இல்லை. சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக இப்படி ஒரு பெயரை வைத்துள்ளார்களாம். ஒரு சிறிய கிராமம் இது. மொத்தமே 8.71 சதுர மைல் அளவுதான் கிராமம். ஒன்றிரெண்டு சுற்றுலாத்தலங்கள் தான் இங்கே இருக்கின்றன.
1962 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, இக்கிராமத்தில் 1406 பேர்கள் வசித்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் தொகை அதிகரித்து 2008 இல் 2,865 பேராக அதிகதித்துள்ளது. இங்கு Saint Pierre தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் முக்கியமானதொரு சுற்றுல்லாதலம் அது.
அடிக்கடி பெயர்கள் வெளியில் அடிபடாத அமைதியான கிராமம் இது. 2014 இல் இருந்து 2020 வரைக்கு இவ் நகர முதல்வராக Alain Prigent பதவியேற்றுள்ளார். இக்கிராமத்துக்கு வரும் சுற்றுல்லாப்பயணிகள், நுழைவாசலில் உள்ள பெயர்ப்பலகைக்கு எதிரே நின்று நிர்வாணமாக நின்று போட்டோக்கள் பிடித்துக்கொண்டு செல்கிறார்களாம்.
என்னம்மா நீங்க.....
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025