Paristamil Navigation Paristamil advert login

Lascaux Cave : பதினேழாயிரத்துப் பழமை!

Lascaux Cave : பதினேழாயிரத்துப் பழமை!

26 ஆடி 2016 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 19271


பிரான்சின் மிக பழமை வாய்ந்த பெருமைமிகு ஓவியங்கள் எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால்பவற்றையெல்லாம் விட, பதினேழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த ஓவியங்கள் நம் நாட்டில் உண்டு. Lascaux Cave என்றழக்கப்படும் இவ் ஓவியங்கள் பிரான்சின் Dordogne மாவட்டத்தில் உள்ளது. 
 
பதினெட்டு வயதுடைய Marcel Ravidat என்பவர், செப்டம்பர் 12, 1940 ஆம் ஆண்டு Dordogne மாவட்டத்தின் Dordogne நகரில் உள்ள இக்குகையை கண்டு பிடித்துள்ளார். அங்கு பல ஓவியங்கள் தென்பட, ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்... முடிவில், இது 17,300 வருடங்களுக்கு முற்பட்டது என தெரிவித்தனர். 
 
அதன் பின்னர் 1948 ஆம் ஆண்டு அக்குகை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. ஆனால் அக்குகைக்குள் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டதால், அதே போன்றதொரு போலி குகையை அமைத்து.. அங்கு மாதிரி ஓவியங்களை உருவாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார்கள். 
 
ஓவியங்கள் மிக நீண்ட காலமாக அழியாமல் சிதைவடையாமல் இருப்பது பெரும் ஆச்சரியம். Lascaux Cave என கூகுள் செய்தால்... அதன் ஓவியங்களை பார்வையிடலாம். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்