DRANCY - இரு காவற்துறையினர் வைத்திய சாலையில் - மேலதிக விபரங்கள்!!

3 வைகாசி 2025 சனி 13:08 | பார்வைகள் : 1034
நேற்று 20h00 மணியளவில் உந்துருளியை ஒற்றைச் சில்லதை தூக்கிச் வீதியில் அராஜகம் செய்யும் Rodéo, மக்களை இடையூற்றிற்கு உள்ளாக்கியதை காவற்துறையினர் அழைக்கப்பட்டனர்.
ஆனால் இதில் ஒருவரைக் காவற்துறையினர் மடக்கிப் பிடிக்க அந்த இடத்தில் பல இளைஞர்கள் கூடிக் காவற்துறையினரை அவமானப் படுத்தியதோடு கற்களையும் வீசி உள்ளனர்.
இந்தக் காணொளி பல சமூக தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
https://dai.ly/x9iwna4https://dai.ly/x9iwna4
இதில் உந்துருளியால் தாக்க வந்தவரை பாதுகாப்பிற்காகக் காவற்துறையினர் காலில் சுட்டுள்ளனர். உந்துருளியால் தாக்கியதில் ஒரு காவற்துறை வீரர் காயமடைந்துள்ளார்.
ஆனாலும் அங்கு நிலைமை மோசமாக இருந்ததால், மேலதிகக் காவற்துறையினர் அழைக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவனையும், இரு காவற்துறையினரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தள்ளிவீழ்த்ப்பட்டதில் ஒரு காவற்துறை வீரரிற்கு முதுகில் பலமாக அடிபட்டுள்ளது. துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட காவற்துறை வீரரும் அதிர்சியடைந்துள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் பொபினி காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.