அமெரிக்காவை தாக்கிய புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
3 வைகாசி 2025 சனி 13:47 | பார்வைகள் : 6297
அமெரிக்காவில் உருவான புயலால் அங்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி கென்டகி, டல்லாஸ் உள்ளிட்ட பல மாகாணங்களை புயல் பந்தாடியது.
இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் புயல் கரையை கடந்தபோது மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
அப்போது மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமார் 900 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.


























Bons Plans
Annuaire
Scan