Paristamil Navigation Paristamil advert login

சிகரம் தொட்ட மனிதர்கள் : Brigitte Bardot!!

சிகரம் தொட்ட மனிதர்கள் : Brigitte Bardot!!

25 ஆடி 2016 திங்கள் 10:00 | பார்வைகள் : 19387


சிகரம் தொட்டவர்களின் வாழ்க்கை யாருக்குமே அத்தனை சந்தோசமாக இருந்ததாக சரித்திரம் இல்லை. 'மழையில் அழுகிறேன்!' என சார்லி சாப்ளின் சொன்னது போல்... திரையில் பலரை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தவர்கள், திரைக்குப் பின்னால் பல சொல்ல முடியாத துன்பங்கள் பலதை சந்தித்தவர்கள் தாம்!! நம் கதாநாயகி Brigitte Bardot போல்!! 
 
செப்டம்பர் 28, 1934 ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது 81 வயதாகிறது. பரிசில் பிறந்த இவர் தன் வாழ்நாளின் ஆரம்பங்களில் சந்தோசம் என்பதையே தொலைத்திருந்தார். அழகும் இளமையும் நிரம்பி வழியும் பருவப்பெண்ணாக வளர்ந்ததும் பிரெஞ்சு சினிமா வாரி எடுத்துக்கொண்டது. ஆனால் முதலில் அவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் தான் நடித்தார். 'திரையிலாவது சிரிப்போமே!' என்ற கோட்பாடு அவருக்கு. மொத்தமாக பதினேழு திரைப்படங்களில் குட்டி குட்டியாய் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தார். அப்போது திரையில் வரும் Brigitte Bardot ஐ பார்த்து மக்கள் சிரித்தாலும், இவரை ஒரு நடிகையாக யாரும் கணக்கெடுக்கவில்லை. அது குறித்து அவரும் கண்டுகொள்ளவில்லை. நிஜ வாழ்க்கையை விட திரை வாழ்க்கை ஓரளவு திருப்த்தியாக இருந்தது. 
 
1953 ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் போது ஒரு மேடை நாடகத்தில் தோன்றினார். அப்போது திரை உலகினர் பலருக்கு Brigitte Bardot அறிமுகமானார். சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. பணத்தேவைகள் அதிகமாக கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தார். சில திரைப்படங்களில் நிர்வாணமாக நடித்தார். அந்த நேரத்தில் அவரின் காதல் பிரிந்தது. 
 
பின்னர், இயக்குனரும் தன் முன்னால் கணவருமான Roger Vadim இன் இயக்கத்தில் வெளியான And God Created Woman திரைப்படத்தில் நடித்தார். அது தேசங்கள் கடந்து புகழை பரப்பியது. அதன் பின்னர் பல திரைப்படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் எல்லாம் நடித்தார். சினிமே கிராஃப் மேலேறிக்கொண்டு செல்ல... அவரின் off Screen வாழ்க்கை சிக்கலுக்குளாகிக்கொண்டு வந்தது. காதல் தோல்வி கல்யாண தோல்வி என பல இடர்கள். நான்கு பேரை திருமணம் செய்து, வாழ்க்கை தோல்வியில் முடிந்து ஐந்தாவது திருமணம் செய்துகொண்டார். 
 
உடன் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் இவரை தின்றுவிடும் நரிகளாக இருந்ததை அறியவில்லை. நம்பி ஏமாந்தத கதைகள் அனைத்தும் தனியாக எழுதவேண்டும். தன் வாழ்நாளில் சொல்லிக்கொள்ளும் படியான திரைப்படங்கள் அமைந்தன. சொல்லிக்கொள்ளும்படியான வாழ்க்கை அமையவில்லை!! தன் துறையில் விடாப்பிடியான சிகரம் தொட்டவர் நம் கதாநாயகி Brigitte Bardot !!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்